கொரோனா தடுப்பு பணிகளுக்கு 1000 மருத்துவர்கள்.. தமிழக அரசு அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த கொரோனா தடுப்பு பணிக்காக மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட கூடுதலாக சுமார் 1000 மருத்துவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டமேற்படிப்பு முடித்த 1000 மருத்துவர்கள் அடுத்த இரண்டு மாதத்தில் சென்னையில் தடுப்பு பணிகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் இருக்கும் அரசு மருத்துவமனையில், கொரோனா வார்டுகளில் இவர்கள் வரும் இரண்டு மாதத்திற்கு பணியில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பட்டியலை தயாரித்து வந்த மருத்துவ நிர்வாகம் அளித்த ஒப்புதலின் அடிப்பையில், தற்போது 1000 மருத்துவர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இவர்கள் இன்று முதல் பணிகளை துவங்கவுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பணி மற்றும் அரசு மருத்துவமனையில் இன்று முதல் தங்களின் பணிகளை துவங்குவார்கள் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chennai additional doctors approve to work corona virus treatment


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->