மக்கள் கூடும் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடத்துங்கள் , மாநிலங்களுக்கு கோரிக்கை விடுத்த மத்திய அரசு..! - Seithipunal
Seithipunal


பூஸ்டர் தடுப்பூசி விரைந்து செலுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. முதல் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை இந்தியாவில் சுமார் 64 கோடி பேர் பூஸ்டர் தடுப்பூசி செகுத்த தகுதியுள்ளவர்களாக இருந்தனர். ஆனால், அவற்றில் 8 சதவீதம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். கடந்த ஜூலை முதல் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து சுகாதாரதுறை மந்திரிகளுடன் காணேலி காட்சி மூலம் உரையாடினார். அதில், அவர் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

பள்ளி, கல்லூரி, பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி  முகாம்கள் நடத்தி தகுதி வாய்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும். தடுப்பூசிகள் வீணாகாத
வகையில் காலாவதியாக மாற உள்ள தடுப்பூசிகளை முதலில் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். 

கொவில்ட் ஷீல்ட், கோவக்சின் என எந்த தடுப்பூசிகளை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த அதகுதி வாய்ந்தவர்கள் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Health Minister Said Held Vaccines camps


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->