வாழப்பாடியில் பரபரப்பு.. ஆளுநர் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த நபர் மீது வழக்கு பதிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என் ரவி பதவி ஏற்றதில் இருந்து தமிழக அரசுக்கும் ஆளுநருக்கு இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி திராவிட சித்தாந்தங்களை விமர்சனம் செய்தும், சனாதன தர்மம் பற்றி உயர்வாகவும் பொது நிகழ்ச்சிகளில் பேசி வருகிறார்.

அதே போன்று தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பப்படும் மசேதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்துவதாகவும் தமிழக அரசு தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக ஆளுநர் ஆர்.என் ரவிக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு உள்ளது.

இரு தினங்களுக்கு முன்பு ஆங்கில நாளிதழுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் ஆளுநர் ஆர்.என் ரவியின் படத்துக்கு இஸ்லாமியர் ஒருவர் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்து பேருந்து நிலையத்திற்கு சென்ற பாஜகவினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை அவமதித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் ஆளுநர் ஆர்.என் ரவியின் படத்தை அவமதித்ததாக கலீல் ரஹ்மான் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சம்பவத்தை கண்டித்து சேலம் மாவட்ட பாஜக தலைவர் தலைமையில் போராட்டம் செய்த பாஜக நிர்வாகிகள் 28 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் வாழப்பாடி பேருந்து நிலையத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Case against the person who garlanded with shoes to rn ravi picture at vazhappadi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->