தொழில் அதிபர் கொலை - ஓட்டுநர் அளித்த பகீர் வாக்குமூலம்! போலீசார் தீவிரம்! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம், முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகஜோதி (வயது 48) இவர் கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தார். 

தூத்துக்குடி விளாத்திகுப்பம் அருகே காட்டுப்பகுதியில் காரில் எரித்து கொலை செய்யப்பட்டு நேற்று முன்தினம் இரவு பிணமாக கிடந்தார். 

இது தொடர்பாக கார் ஓட்டுநர் உள்ளிட்ட 4 பேரை குளத்தூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது ஓட்டுநர் தெரிவித்திருப்பதாவது, ''கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நாகஜோதியிடம் எனது பண தேவைக்காக 2 லட்சம் பணம் வாங்கி இருந்தேன். 

ஆனால் நாகஜோதி என்னிடம் அடிக்கடி பணத்தை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்து நாகஜோதியை நான் கொலை செய்ய முடிவு செய்தேன். 

நேற்று முனியினம் காலை நாகஜோதிக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு விளாத்திகுப்பம் வரவழைத்து எனது சகோதரர் மற்றும் உறவுக்காரர்களை வைத்து நாகஜோதியை காரில் ஏற்றி சென்றேன். 

பின்னர் நாகஜோதியை காரில் வைத்து கழுத்தை இறுக்கி கொலை செய்தோம். நாகஜோதியின் உடலை காரின் உள்ளே வைத்து காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி நாகஜோதியை எரித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டோம்'' என கார் ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

business man murder case driver arrested


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->