#BigBreaking || ஜன.19 வரை ஸ்ட்ரைக் தற்காலிக வாபஸ்.!! பொதுமக்கள் நிம்மதி.!! - Seithipunal
Seithipunal


ஜனவரி 19ஆம் தேதி வரை வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பொங்கல் காலங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது. ஓய்வூதியதாரர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வேலை நிறுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுவது பொதுமக்கள் தான் என கருத்து தெரிவித்தது. 

போராட்டம் நடத்த உரிமை இல்லை என கூறவில்லை பண்டிகை நேரத்தில் போராட்டத்தை நடத்துவது முறையற்றது என அறிவுறுத்தியதோடு விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது.
வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்த போது ஜனவரி 19ஆம் தேதி வரை போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தன. பொங்கல் பண்டிகை ஒட்டி மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைக்க தலைமை நீதிபதி அறிவுறுத்தி இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் அரசு தங்கள் நிலைபாட்டில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாகவே தற்போது கோரிக்கைகள் நிறைவேற்ற முடியவில்லை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. நேற்று அமைதியாக நடந்த வேலை நிறுத்த போராட்டம் தற்போது வன்முறையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என தமிழக அரசு நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் போக்குவரத்து தொழிலாளாளர்கள் மீது எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்க கூடாது என நீதிமன்றம் அரசுக்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிட தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus Strike withdrawn till January 19


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->