பேருந்து நடத்துனரை கல்லால் தாக்கி வழிப்பறி செய்த மர்ம நபர்கள்! போலீசார் தீவிரம்! - Seithipunal
Seithipunal


விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே நந்திவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவர் மாநகராட்சி பேருந்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். திருவான்மியூர் பனிமலை பகுதிகளில் இவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 

வழக்கம் போல் இன்று அதிகாலை 3 மணி அளவில் திருவான்மையூரில் உள்ள ஜெயந்தி சிக்னல் அருகே வீட்டிற்கு செல்வதற்கு பேருந்துக்காக காத்திருந்தார். 

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் வாசுதேவனிடம் சென்று அவரது செல்போனை கேட்டுள்ளார். 

அவர் கொடுக்காததால், ஆத்திரம் அடைந்த 3 பேரும் வாசுதேவனை அருகில் இருந்த கற்களை எடுத்து தாக்கியுள்ளனர். 

இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். பின்னர் மயங்கி கிடந்த வாசுதேவனிடம் இருந்து செல்போனை 3 பேரும் பறித்துச் சென்ற தப்பி ஓடி தலைமறைவானார்கள். 

தலையில் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்த வாசுதேவனை வழியாக சென்றவர்கள் பார்த்து அவரை 108 அவசர ஊர்தி வர வைத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 15 ஆயிரம் மதிப்பிலான செல்போனை கொள்ளையடித்துச் சென்ற வழிப்பறிக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள். 

மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பார்த்து கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus conductor mysterious persons attacked


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->