அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு கடந்த ஒன்றாம் தேதி முதல் பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. குறிப்பாக மாவட்டங்களுக்குள் மட்டும் பொதுப் போக்குவரத்து மட்டுமே தொடங்கப்பட்டது. 

மாவட்டங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து வரும் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் தொடங்கும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார். இதன் மூலம் 7 ஆம் தேதி முதல் பேருந்துகளில் எந்த மாவட்டத்திற்கு வேண்டுமானாலும் செல்ல முடியும். அதேபோல் பயணிகள் ரயில் சேவை வைக்கும் அரசு அனுமதி அளித்துள்ளது. 

இந்தநிலையில், ஈரோடு மாவட்டம் லக்காபுரம் அருகே இரு சக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. லக்காபுரத்திலிருந்து ஈரோட்டை நோக்கி சென்றிக்கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சாலை விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bus accident in erode four members spot out


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->