விளையாட்டு சண்டை விபரீதத்தில் முடிந்த பரிதாபம்.! நண்பனாக இருந்த அண்ணன் தம்பியின் இறுதி சோகம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சென்னையை அடுத்துள்ள ராயப்பேட்டை சிவசுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது 35). இவர் தனியார் பிரிண்டிங் பிரஸ்ஸில் பணியாற்றி வருகிறார். இவரது சகோதரரின் பெயர் தனசேகர் (வயது 31). 

இவர் கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில்., இவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளை வெகு விமர்சையாக செய்து வந்தனர். 

இந்த தருணத்தில்., பாஸ்கர் திடீரென தனக்கு திருமணம் வேண்டாம் என்று கூறத் தொடங்கியுள்ளார். மேலும் தனது அண்ணனுக்கு திருமணம் முடிந்தால் தான்., தாமும் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிவந்த தனசேகர் தனது சகோதரரிடம் திருமணத்துக்கு வற்புறுத்தி வந்துள்ளார். 

இந்த சமயத்தில்., பாஸ்கரன் தனது முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனையடுத்து பாஸ்கரை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்த நிலையில்., நேற்று வீட்டில் இருந்த பாஸ்கரிடம் கத்தியை காட்டி திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை என்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று சகோதரர் மிரட்டியுள்ளார். 

இதற்கு பாஸ்கரன் பயப்படாத நிலையில்., பயமுறுத்துவதற்காக கழுத்தை வெட்டுவது போல கத்தியை கொண்டு சென்றுள்ளார். இந்த சமயத்தில்., எதிர்பாராத விதமாக கழுத்தில் கத்தி அழுத்தமாக பதிந்ததை அடுத்து., சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

மேலும் அண்ணனை தானே கொன்று விட்டதை எண்ணி கடும் மன உளைச்சலில் கண்ணீர் விட்டு கதறி அழுத சகோதரர்., அங்குள்ள ராயப்பேட்டை காவல் நிலையத்தில் தாமாகவே முன்வந்து சரணடைந்துள்ளார். 

இதனையடுத்து இவரிடம் விசாரணை மேற்கொண்டு வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர்., இதுகுறித்து அங்குள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து அவர்கள் விசாரணை மேற்கொள்கையில்., பாஸ்கரும் அவரது சகோதரர் தனசேகரன் அண்ணன் தம்பி போன்ற இல்லாமல் நண்பர்கள் போலவே இருப்பார்கள் என்று அப்போது மக்கள் தெரிவித்தது., காவல்துறையினருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

brother kill his elder brother


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->