தன் மகன் செய்த தவறை கண்டிக்காமல், நியாயப்படுத்திக் கொண்டிடுகிறார் முதல்வர் ஸ்டாலின் - பாஜக எம்எல்ஏ வானதி.!  - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் விளையாட்டு துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக ஆட்சியில் ஐபிஎல் விளையாட்டு போட்டிகளை காண சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பாஸ் வழங்கி போட்டியை காண ஏற்பாடு செய்யப்பட்டது.

ஆனால், தற்போது 300-400 கொடுக்கப்படுவதாக கூறுகிறார்கள். ஆனால் கிடைக்கவில்லை. எனவே விளையாட்டு துறை அமைச்சர் அதற்கான வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

இதற்க்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி, உங்கள் நண்பர் அமித்ஷாவின் ஜெய்ஷா ஐபிஎல் டிக்கெட்டை வைத்திருக்கிறார். அவரிடமே நீங்கள் பேசி பெற்றுக்கொள்ளுங்கள் என்று பதிலளித்தார்.

இந்நிலையில், அமித்ஷா குறித்து உதயநிதி பேசியதை அவைகுறிப்பிலிருந்து நீக்க கோரி பாஜக எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கினர் 

அப்போது முதலமைச்சர் ஸ்டாலின், "அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை. அமித்ஷா பெயரை குறிப்பிட்டது என்ன தகாத வார்த்தையா? அப்படி பேசி இருந்தால் நானே அதை நீக்கி விட சொல்லி இருப்பேன்" என்றார்.

ஆனால், இதனை ஏற்றுக்கொள்ளாத பாஜக எம்எல்ஏ.,க்கள் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், "மத்திய உள்துறை அமைச்சர் பெயரை குறிப்பிடும் முன் திரு, மாண்புமிகு என்றோ சொல்லாமல், அமித்ஷா மகனிடம் இருக்கிறது என்கிறார் உதயநிதி. தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக பொன்முடி மகன் கௌதம சிகாமணிதான் உள்ளார். அவர் பெயரை சொல்லி இருக்கலாமே?" என்றார்.

பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவிக்கையில், "தன்னுடைய மகன் என்பதால், அவர் செய்யும் தவறுகள் முதலமைச்சர் கண்ணுக்கு தெரியவில்லை. தவறு செய்தால் கண்டிக்க வேண்டும். அதை நியாயப்படுத்தக் கூடாது" என்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MLA Vanathi Say about cm and cm son


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->