தீரன் சின்னமலை கவுண்டரின் நினைவுதினம் - அண்ணாமலை, டிடிவி, சீமான் ஆகியோர் மலரஞ்சலி.!! - Seithipunal
Seithipunal


சுதந்திர வேட்கை கொண்டிருந்ததோடு மட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். 

தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " தீர்த்தகிரி என்னும் தீரனை, போரிலே வீழ்த்த முடியாமல், ஆங்கிலேயே சதியால், நண்பன் நல்லப்பன் துரோகத்தால், வீழ்த்தி தூக்கிலிட்ட... சங்ககிரி நினைவிடத்தில்... நிற்கிறேன் மாவீரனுக்கு….. மலர் அஞ்சலிகள் " என்று தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், " இந்திய விடுதலைப் போராட்டத்தில் மறக்கமுடியாத மாவீரராக திகழ்ந்து, ஆங்கிலேயருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய மன்னர் தீரன் சின்னமலை அவர்கள் இந்த தேசத்திற்காக தன் இன்னுயிரை ஈந்த நாள் இன்று!

சுதந்திர வேட்கை கொண்டிருந்ததோடு மட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைவரையும் அரவணைத்து நல்லாட்சி நடத்திய நாயகரான தீரன் சின்னமலையின் பெருமைகளை எந்நாளும் போற்றிடுவோம் " என்று தெரிவித்துள்ளார். 

இதனைப்போன்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், " தமிழ்த்தேசிய இனத்தின் வீரத்தையும் மானத்தையும் உலகத்தாரைத் திரும்பி பார்க்க வைத்த நம் வீரப்பெரும்பாட்டன்! வெள்ளைய ஏகாதிபத்தியத்திடம் அடிமைப்பட்டுக்கிடந்த தன் அன்னைத் தமிழ்ச் சமூகத்தை விடுவிக்க வீரப்போர் புரிந்த புரட்சியாளன்!

அடிமைப்பட்டுக்கிடந்த தன் இனத்தின் மக்களை அடிமைத் தளை அறுத்து விடுதலைக் காற்றைச் சுவாசிக்க வைத்த மான மறவன்! நமது பெரும்பாட்டன் தீரன் சின்னமலையின் 216ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 03-08-2021 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai AMMK TTV Dhinakaran NTK Seeman Statement about Dheeran Sinnamalai Gounder Memorial Day


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->