வினோதமாக நடக்கும் வட மாநில நபர்.! உயிருக்கே உலை வைக்கும் நடைபயணத்தால் அச்சம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கிழக்கு கடற்கரை சாலையில்  போக்குவரத்திற்கு இடையூறை விளைவிக்கும் வகையில் பீகார் மாநிலத்தைச் சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்டவரின் நடவடிக்கைகள் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பீகார் மாநிலத்தைச் சார்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கடந்த சில தினங்களாக கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதிகளில் சுற்றித் திரிகிறார். இவர் ஆபத்தான வகையில் சாலையின் குறுக்கே பின்பக்கமாக நடந்து செல்கிறார்.

நேராக நடந்து செல்வது போல காலை பின்பக்கமாக வைத்து மணிக்கணக்காக இவ்வாறு சுற்றித் திரிகிறார் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த கிழக்கு கடற்கரை சாலையில் இவ்வாறு நடந்து செல்வதால் அவர் வாகனங்களில் அடிப்பட்டு விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

எனவே, அந்த நபரை மீட்டு மனநல காப்பகத்தில் சேர்க்குமாறு சமூக ஆர்வலர்கள் அரசுக்கும் காவல்துறைக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனது உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் பின்பக்கமாக செல்லும் மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில இளைஞரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bihar man who walk backwards for hours creates panic for pubic and riders


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->