பயணியின் கை விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


பயணியின் கை விரலை கடித்து துப்பிய ஆட்டோ ஓட்டுநர் - நடந்தது என்ன?

சென்னையில் உள்ள வெட்டுவாங்கேணி பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவர், பணியை முடித்துவிட்டு  திருவான்மியூர் ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து அவரது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, அவர் வேலை செய்த அசதியில் ஓட்டுநர் இருக்கையின் பின்புறம் உள்ள கம்பியில் காலை வைத்துள்ளார். அதற்கு ஆட்டோ ஓட்டுநர் சந்தானம் காலை எடுக்குமாருத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தானம், ஆட்டோவில் இருந்த கம்பியை எடுத்து ராமுவை தாக்கி, அவருடைய கை சுண்டு விரலை கடித்து துப்பி உள்ளார். 

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்தத்தோடு நின்ற ராமுவை மீட்டு ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவருடைய கை விரலை ஒட்டவைக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். 

இதற்கிடையே, இந்த சம்பவம் தொடர்பாக, திருவான்மியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநர் சந்தானத்தை கைது செய்து, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

auto driver bit passanger hand finger in thiruvanmiyur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->