போலி முகநூல் கணக்குகள் மூலம் பண மோசடி...! இருவரை கைது செய்தது காவல் துறை...! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் மூலம் கடன் தருவதாக ஏமாற்றி பண மோசடி செய்த நபர்களை கைது செய்தது காவல்துறை.

மதுரை மாவட்டம் செக்கானூரணி பகுதியை சேர்ந்தவர் குமரேஷ் இவருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது அதற்காக பல இடங்களில் கடன் கேட்டு அலைந்துள்ளார். இந்நிலையில், ஆன்லைன் மூலம் கடன் வழங்கும் நிறுவனத்தை முகநூல் மூலம் அணுகியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி எண் கிடைத்துள்ளது. ஆனால் அந்த எண் அணைக்கப்படிருந்து.

இதற்கிடையில், குமரேஷ் செல்போனுக்கு ஓரு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது அதில் பேசியவர்கள் வங்கியில் இருந்து பேசுவதாகவும் ரூ2 லட்சம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்

இதனை அடுத்து ரூ.53,100 பணத்ததை முதலில் கட்டவேண்டும் என சொல்லியுள்ளனர். இதனை நம்பிய குமரேஷ் பணத்தை அனுப்பியுள்ளார். அதன் பின் அந்த செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது அணைக்கபட்டிருந்தது. அது மட்டுமின்றி கடன் பணமும் வரததால் தான் ஏமாற்றபட்டதை உணர்ந்தார்.

இதுகுறித்து அவர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட சைபர்கிரைம் காவல்துறையினர் சிவகங்கையை சேர்ந்த பிரசாந்த் குமார் மற்றும் சரவணன் இருவரையும் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் முகநூல் வழியே கடன் தருவதாக பலரை ஏமாற்றி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து ரூ30,000 பணத்தை பறிமுதல் செய்த காவல்துறையினர் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arrested for money laundering through Facebook


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->