அரியலூர் காவல் துறையினர் செய்த அசத்தல் வேலை.! பொதுமக்கள் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் முக்கியமானது அரியலூர் ஆகும். இருக்கும் வசதிகளை வைத்துக் கொண்டு அரியலூர் காவல்துறையினர் பல்வேறு பணிகளை மேற்கொண்டு, பொதுமக்களிடம் பாராட்டு பெற்று வருகின்றனர்.

குறிப்பாக ஆண்டிமடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து மூன்றாம் கண் எனப்படும் இடத்தில் சிசிடிவி கேமரா அமைத்து 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வசதிகளுடன் அதிதி அதிநவீன கேமராக்கள் ஒயர்கள் அனைத்தையும் தரையில் புதைத்து நவீன முறையில் அமைக்கப்பட்டிருக்கின்றது.

ஆண்டிமடம் காவல் நிலையத்தில் இருக்கும் சிறிய அரை கண்ட்ரோல் ரூம் ஆக மாறி இருக்கிறது. இதன்பிறகு திருட்டு மற்றும் குற்றச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளது என பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆண்டிமடம் சிவன் கோவில் குளத்தை தூர்வாரும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

பல ஆண்டு காலமாக தூர்வாரப்படாமல் இருந்த அந்த குளத்தை பொதுமக்களின் பங்களிப்புடன் தூர்வார காவல்துறையினர் முடிவெடுத்து நடத்தி வருகின்றனர். தொகுதி எம்எல்ஏவான தாமரை ராஜேந்திரன் வந்து பார்வையிட்டு குளத்தில் படிகள் கட்ட 10 லட்ச ரூபாய் அளிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். இந்த முயற்சி பொதுமக்களிடம் பெரும் பாராட்டை ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur police officer work


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->