அரியலூர்: கொரோனா விதிமுறையை கண்டுகொள்ளாத மக்கள், கடுப்பாகி ஆணையர் செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


அரியலூரில் இருக்கும் காய்கறி சந்தையில் மிகவும் நெருக்கடியாக மக்கள் கூட்டம் இருப்பதால், அரசு மேல்நிலைப்பள்ளி திடலுக்கு காய்கறி சந்தையை மாற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

காய்கறி சந்தையில் பொதுமக்கள் விதிகளை சற்றும் மதிக்காமல் இடைவெளி விடாமல் முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளை வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக கடுப்பான நகராட்சி ஆணையர் பொது மக்களின் மீது கிருமிநாசினியை கண்டபடி தெளித்து பாடம் கற்பித்து இருக்கின்றார். 

ஒவ்வொரு கடையிலும் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு தேவையான பொருட்களை வாங்க வட்டம் போடப்பட்டு இருக்கின்றது. மேலும், நகராட்சி  அதிகாரிகளும் அவ்வப்போது ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களை இடைவெளிவிட்டு நிற்கச்சொல்லி அறிவுறுத்தி வருகின்றனர். 

இருப்பினும் அந்த மக்கள் விதிகளை சற்றும் மதிக்காமல் தங்களுடைய வேலையை முண்டியடித்துக் கொண்டு பார்த்ததால் அதிர்ச்சி அடைந்த நகராட்சி கமிஷனர் பொதுமக்கள் மீது கிருமி நாசினியை தெளித்து இருக்கின்றார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ariyalur commissioner angry with public 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->