புறம்போக்கு நிலத்தை அரசுக்கே விற்ற அதிகாரிகள்... மொத்தமாக தூக்கிய லஞ்ச ஒழிப்பு..!! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டம் ஜி.ஆர்.டி கார்டனை சேர்ந்த முத்து மீனாட்சி தற்போது விழுப்புரம் சர்க்கரை ஆலை நிர்வாக மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் திருவாரூர் வருவாய் கோட்ட ஆட்சியராக பணிபுரிந்த பொழுது நத்தம் புறம்போக்கு இடத்தை வீட்டுமனை பட்டா வழங்கியதும் அதே இடத்தை நெடுஞ்சாலைத்துறை உருவாக்க பணியின் பொழுது மீண்டும் அரசிடமே நல்ல விலைக்கு விற்று முறை கேட்டில் ஈடுபட்டதக புகார் எழுந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் திருவாரூர் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் முத்துமீனாட்சி, நில எடுப்பு சிறப்பு மாவட்ட வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் துர்கா ராணி, உதவியாளர் கார்த்தி, அடியக்கமங்கலத்தை சேர்ந்த முருகன், முல்லையம்மாள், குமார், சுகுமார், சதீஷ், சுகுமாரி உள்ளிட்ட12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த நிலையில் நேற்று திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் நிலம் கையகப்படுத்தும் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக பணியை புரிந்து வரும் மணிமேகலையின் வீட்டில் திருச்சி லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் பிரசன்ன வெங்கடேசன் தலைமையிலான போலீசார் திடீரென சோதனை செய்தனர். அதேபோன்று கும்பகோணத்தில் உள்ள குடவாசல் வட்டாட்சியர் ராஜன் பாபுவுக்கு சொந்தமான வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Anti corruption dept raided govt officials houses


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->