நாமக்கல்,கரூர் மக்கள் சந்திப்புக்கு முன் வெற்றிக் கழக அறிவிப்பு...!- ஒழுங்கும் ஒற்றுமையும் கடைபிடிக்க வேண்டும்!
announcement before Namakkal Karur public meeting Order and unity maintained
நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில், மக்களின் முதல்வர் வேட்பாளர் நம் வெற்றித் தலைவர் கலந்து கொள்கிறார். இதனை முன்னிட்டு கழகத் தோழர்களும் பொதுமக்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் பின்வருமாறு அறிவிக்கப்படுகின்றன:
தலைவரின் வாகனத்தை யாரும் இருசக்கர / பிற வாகனங்களில் பின்தொடரக் கூடாது.
கட்டடங்கள், மின்கம்பங்கள், மரங்கள், கிரில், தடுப்பு வேலிகள் போன்றவற்றில் ஏறவோ, அணுகவோ கூடாது.

கர்ப்பிணிப் பெண்கள், முதியோர், சிறுவர், மாற்றுத் திறனாளிகள் வீடுகளில் இருந்தே நேரலை மூலம் நிகழ்ச்சியை காண வேண்டும்.
ஆம்புலன்ஸ் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும்.
காவல் துறையின் அறிவுரைப்படி வரவேற்பு நடவடிக்கைகள் (அலங்காரம், பிளக்ஸ், வளைவு, கொடி) அனுமதி இன்றி வைக்கக் கூடாது.
வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்த வேண்டாம்.
சகோதரத்துவ உணர்வுடன், மரியாதையுடன் நடந்து கொண்டு, சட்டம்-ஒழுங்கு காக்க உதவ வேண்டும்.
பட்டாசு வெடிப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
நம் கழகத்தின் ஒவ்வொரு செயலிலும் கட்டுப்பாடு, கண்ணியம், ஒற்றுமை ஆகியவை வெளிப்பட வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் நோக்கம்.
English Summary
announcement before Namakkal Karur public meeting Order and unity maintained