கணவன் இறந்தபின் டாணாக மாறிய மூதாட்டி.! மகன்கள் அதிர்ச்சி.!!  - Seithipunal
Seithipunal


மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அந்தியூர் எண்ணமங்கலத்தை சேர்ந்த முத்தாயி அம்மாள் (87 வயது) கலந்து கொண்டார். 

அவர் கலெக்டரிடம் ஒரு மனுவை கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலம் பகுதியில் வசித்து வந்தேன். எனது கணவர் பெயர் செல்லப்ப கவுண்டர். எனக்கு 3 மகன்கள் உள்ளனர். எனது கணவர் கடந்த 4 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இந்நிலையில் எனது சொத்தை எனது 3 மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் என்னை முறையாக கவனிக்கவில்லை.

குறிப்பாக 2-வது மற்றும் 3-வது மகன்களுக்கு நிறைய சொத்து எழுதி வைத்தேன். எண்ண மங்கலத்தில் எனது கணவரின் பூர்வீக வீடு உள்ளது. அங்கு தான் வசித்து வந்தேன். தற்போது எனது 2 மகன்களும் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். நான் தற்போது அந்தியூர் சங்கராபாளையத்தில் உள்ள எனது தம்பி வீட்டில் வசித்து வருகிறேன்.

என்னுடைய ஆசை என் கணவர் வாழ்ந்த வீட்டில் நான் இறுதிவரை வாழ வேண்டும். அதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் எனது மகன்களிடம் இருந்து பராமரிப்பு தொகை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்." என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இன்று பல பிள்ளைகளும், தனது பெற்றோர் தனக்கு எதிராக செயல்படமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவர்களை பல கொடுமைக்கு ஆளாக்குகின்றனர். பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்டும், மூதாட்டியின் இந்த துணிச்சலான செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அவருக்கு அரசாங்கத்தின் வாயிலாக நல்லது நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an old women petition to collector


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->