அம்மா குடிநீர் இனி 10ரூபா இல்லைங்கோ..! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


கடந்த 2013ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறைந்த விலைக்கு கிடைக்கும் இந்த தண்ணீர் பாட்டில்கள் பேருந்து நிலையங்களில் விற்கப்படும். தற்போது வரை 80 ஆயிரம் லிட்டர் அம்மா குடிநீர் பாட்டில் சேவை சார்பில் விற்கப்பட்டு இருக்கின்றது.

ஒரு லிட்டர் குடிநீரை முழுவதும் கொடுக்காமல் மிச்சம் வைத்து விட்டு செல்வதன் காரணமாக அதிக அளவில் பாட்டில்கள் தேங்கி இருக்கிறது. எனவே, தமிழக அரசு இதற்கு ஒரு தீர்வை கொண்டு வரும் விதமாக முடிவெடுத்துள்ளது. அதன்படி இனி கண்ணாடி பாட்டில்களில் தயாரிக்கப்படும் 750 மில்லி குடிநீர் உள்ளடக்கிய பாட்டிலை விற்கத் திட்டமிட்டுள்ளது.

இந்த பாட்டிலின் விலை எனது ஐந்து முதல் ஏழு ரூபாயாக இருக்கும் என்று கூறப்படுகிறது. புதிதாக வரும் கண்ணாடி பாட்டில்களின் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைக்கப்படுவதுடன் தண்ணீர் வீணாவதை தடுக்க முடியும் என தமிழக அரசு சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு புதிய இயந்திரம் வாங்குவதற்கான டெண்டர் நடவடிக்கையை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. எனவே புதிய பாட்டில்களின் உற்பத்தியை இரண்டு மடங்காக உயர்த்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amma water bottle in tamilnadu


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->