அமித்ஷாவின் ரோடு ஷோ நிகழ்ச்சி திடீர் ரத்து..! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்ற தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், தமிழகத்தில் பிரதமர் மோடி தொடர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகத்தில் பிரசாரம் செய்யவுள்ளார். 

இதற்காக டெல்லியில் இருந்து மதுரைக்கு நாளை பிற்பகல் 3.05 மணிக்கு வருகை தரும் அமித்ஷா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை சென்று காரைக்குடியில் வாகன பேரணி மூலம் பிரசாரம் செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், தற்போது அமித்ஷாவின் வாகன பேரணி நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது, சிவகங்கை பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி நிதி மோசடி செய்ததாக காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளதால் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

amitsha sivakangai road show programme cancell


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->