அனுமதியின்றி பேரணி சென்ற உடன்பிறப்புகளால் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்ட ஆம்புலன்ஸ்! - Seithipunal
Seithipunal


பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி! 

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட செயலாளராக பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் நியமனம் செய்து திமுக தலைமை நேற்று அறிவித்தது. இந்நிலையில் இன்று திமுக மாவட்ட செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் ஆன புதிய பொறுப்பாளர்கள் கச்சேரி ரோட்டில் அமைந்துள்ளகட்சி அலுவலகமான பகுத்தறிவு மன்றத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர்.

இந்த பேரணியானது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி, அனுமதி இன்றி நூற்றுக்கணக்கான உடன் பிறப்புகளுடன் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றனர். இதனால் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வரும் பாதை, கச்சேரி சாலை காந்தி சாலை, மணி கூண்டு சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து மொத்தமாக முடங்கியது.

இதன் காரணமாக வாகனங்களில் செல்வோர் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே வர முடியாத காரணத்தால் பள்ளி முடித்துவிட்டு வீடு திரும்பிய மாணவர்கள் ஒரு மணி நேரமாக பேருந்து  நிலையத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் ஏற்பட்ட வாகன நெரிசலின் காரணமாக அவ்வழியாக செல்ல வேண்டிய அவசர உறுதி நெரிசலில் சிக்கிக்கொண்டது. நீண்ட நேரம் அபாய ஒலி எழுப்பியும் கூட்டம் கலைந்த செல்லவில்லை. போதிய காவலர்கள் பாதுகாப்பு பணியில் இல்லாததால் அவசர ஊர்தி ஓட்டுனர் செய்வது அறியாது திகைத்து நின்றார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambulance stuck in traffic jam due to siblings who went to rally without permission


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->