தமிழகத்தில் அலெர்ட் செய்யப்படும் மருத்துவமனைகள்., சுகாதாரத்துறை திடீர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு தொடங்கிவிட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த புதன்கிழமை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது, மழையால் ஏற்படும் நோய்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக சுகாதாரத்துறை இறங்கி உள்ளது.

அதன்படி, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளின் பருவமழை நோய் தடுப்பு மற்றும் மருத்துவ முன்னேற்பாடுகள் தொடர்பான  ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூர் உள்ள சுகாதாரம் மற்றும் குடும்ப நல பயிற்சிமைய அரங்கில் நேற்று நடைபெற்றது.  சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு மற்றும் தனியார் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மருத்துவமனை பிரதிநிதிகள் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் டாக்டர் பீலா ராஜேஷ் பேசியதாவது, தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளத. மழை காலத்தில் கொசு உற்பத்தி ஆகும் இடங்களை கண்டறிந்து அதனை தடுக்கும் நடவடிக்கைகளை தமிழக சுகாதார துறை எடுத்து வருகிறது. மேலும், வீடு வீடாக சென்றும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. 

கடந்த 10 மாதங்களில் தமிழகத்தில் 3 ஆயிரத்து 486 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், கடலூர், வேலூர், கோவை ஆகிய 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகம் உள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக சுகாதார துறை சார்பில் துரிதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

வடகிழக்கு பருவமழை மழையால் ஏற்படும் போது அந்த நோய்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க அனைத்து தனியார் மருத்துவமனைகளும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், அவசர சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து பொருட்களை கூடுதலாக இருப்பு வைத்திருக்க வேண்டும். 

கர்ப்பிணிகளுக்கு மழைக்காலத்தில் பிரசவ தேதி வருமாயின் அவர்களை முன்கூட்டியே அனுமதித்து முறையான சிகிச்சை அளிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர்டாக்டர் பீலா ராஜேஷ் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alert for tamilnadu hospital


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->