திமுகவுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் - இபிஎஸ் பரபரப்பு பேச்சு.!
admk public secretary speech in mayiduthurai function
சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால், மீண்டும் இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திக்க வாய்ப்பு இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மயிலாடுதுறை அருகே நடந்த அதிமுக விழா ஒன்றில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-
“வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல பதிலடி கொடுங்கள். இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்று முதல்வர் பேசி வருகிறார்.
ஆனால், கடன் வாங்குவதில் தான் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை தேசிய கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி இல்லை. யார் யாருடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம் என்றுத் தெரிவித்தார்.
English Summary
admk public secretary speech in mayiduthurai function