பரபரப்பான சூழலுக்கு மத்தியில் தொடங்கும் அதிமுக பொதுக்குழு கூட்டம் - எப்போது? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நாளை அதாவது, டிசம்பர் 26 ஆம் தேதி நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- 

"கட்சி விதிகளின் படி அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 26-ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறும்.

பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கு தனித்தனியே அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். அனைவரும் அழைப்பிதழ்களுடன் பங்கேற்க வேண்டும்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள பரபரப்பான சூழலில் தற்போது அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டம் கூட உள்ளது. நாளை காலை 10.35 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk meeting at tomarrow


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->