முன்னாள் அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் திடீர் அனுமதி - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில மாத காலமாக டெங்கு காய்ச்சல் பாதிப்பால் மக்கள் அதிகயளவில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றன. இந்தக் காய்ச்சலைத் தடுப்பதற்கு அரசு தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. 

இருப்பினும், கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் டெங்கு பாதிப்பு பரவல் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் தங்கமணி லேசான காய்ச்சல் காரணமாக நள்ளிரவு 1 மணியளவில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அமைச்சர் தங்கமணியை மருத்துவர்கள் தங்களுடைய கண்காணிப்பில் வைத்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk formar ministter thangamani admited hospital for dengue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->