#BigBreaking | பாஜகவுடன் கூட்டணி.., அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அதிமுக - பாஜக கூட்டணி தொடருமா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, அதிமுக - பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பாஜகவின் தலையீடு இருப்பதாக அதிமுகவின் மூத்த தலைவர்கள் மறைமுகமாக விமர்சித்து வந்தனர்.

மேலும், பாஜகவின் முக்கிய புள்ளிகள் அதிமுகவில் இணைந்ததால், பாஜகவின் நிர்வாகிகளும் அதிமுகவை கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.

இதன் காரணமாக அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் தொடருமா? என்ற சந்தேகம் எழுந்து வந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அதிமுகவின் நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அமித் ஷா, வரும் மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று தெளிவுபடுத்தியிருந்தார்.

அமித் ஷா கருத்து குறித்த கேள்விக்கு இன்று சட்டப்பேரவை வளாகத்தில் பதிலளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக பாஜக கூட்டணி தொடரும், வரும் மக்களவை தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என்று அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK EPS SAY ABOUT BJP Alliance 2024 election


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->