ஸ்கெட்ச் திமுகவுக்கு தானா? இப்டிலாமா பேசிக்குறாங்க! - Seithipunal
Seithipunal


கூட்டணியில் இருந்து அதிமுக விலகி உள்ள நிலையில், பாஜக கூட்டணியில் இணைவதற்கு உண்டான வேலைகளை ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் செய்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

பாஜக தரப்பிலிருந்தும் ஓபிஎஸ், டிடிவி தினகரனிடம் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சட்ட ரீதியாகவும், தொண்டர்கள் மத்தியிலும் அதிமுக என்றால் எடப்பாடி பழனிச்சாமி என்பது உறுதியாகி விட்ட நிலையில், ஓபிஎஸ் தரப்பின் அரசியல் அமைதியாக உள்ளது.

இந்த நிலையில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் அணியினர், வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

மேலும், பாஜக கூட்டணியில் இருக்கோமோ, இல்லையா என்பதை நாங்கள் சொல்ல முடியாது. அதை பாஜக தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களை உள்ள நிலையில், பாஜக தலைமையில் தனி கூட்டணியும், அதிமுக தலைமையில் தனி கூட்டணி உருவாக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

மேலும், மக்களவைத் தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்துள்ளன.

தற்போது இந்த கூட்டணி உடைந்திருப்பது, தமிழகத்தில் திமுக கூட்டணியை அதாவது இண்டி கூட்டணியை பலவீனப்படுத்துவதற்காக தான் என்றும் சொல்லப்படுகிறது.

அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்து, மீண்டும் கூட்டணியை தொடர்வதற்கு உண்டான வேலைகளையும் பாஜக செய்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுகள் தொடங்கியுள்ளன.

எது எப்படியாக இருந்தாலும் இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் கூட்டணிகள் குறித்து தெளிவான ஒரு முடிவு தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK BJP Alliance break for INDI Alliance Break


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->