#சென்னை || போக்குவரத்து நெரிசல் சர்ச்சை! 2 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


சென்னை அடுத்த பனையூரில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியில் குளறுபடி ஏற்பட்டு பாதுகாப்பு குறைபாடு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக தாம்பரம் காவல்துறை துணை ஆணையர் தீபா சத்யன் மற்றும் சென்னை கிழக்கு இணை ஆணையர் திஷா மிட்டல் ஆகியோர் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதேபோன்று கிழக்கு கடற்கரை சாலை வழியாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பயணம் செய்த போது கடும் போக்குவரத்து நெரிசலால் நடுவழியில் சிக்கியது. இதன் காரணமாக முதல்வரின் கான்வாய் கார் எதிர் திசையில் உள்ள சாலையில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்போது பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களிடம் துறை ரீதியில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோன்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் நேற்று நடைபெற்ற பாஜக மாநில தலைவர் அண்ணமலை தலைமையில் கண்டன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் முடிவில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக சரியாக கையாளாமல் போக்குவரத்து நெரிசல்  குற்றச்சாட்டில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை கைது செய்யாததால் இதன் காரணமாகவும் காத்திருப்போர்  பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Action against 3 IPS officers in traffic congestion in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->