என்னை வெட்டுகிறாயா நீ... இரு உன்னை தீர்த்து கட்டுகிறேன்.! மரத்தை வெட்டிய நபரின் மீது விழுந்த மரம்., வெளியான பகீர் வீடியோ.!!  - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அனைத்தும் பல விதமான துறையில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. அபரீதமான தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்து கொண்டு வருகிறோம். என்னதான் இன்றுள்ள சூழ்நிலையில் பல விதமான பொருட்களின் தயாரிப்பில் பல சாதனைகளை புரிந்து வந்தாலும்., சில கண்டுபிடிப்புகள் நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை மெதுவாகவே நாம் அறிந்து கொள்கிறோம். 

அவ்வாறு நமது மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த பொருட்கள் பல இருந்தாலும்., நமது சுற்றுப்புற சூழ்நிலையிலும்., நமது வாழ்வியலிலும்., நம்மிடமும் பல பாதிப்புகளை ஏற்படுத்திய பொருளில் முக்கிய பொருளாக பிளாஸ்டிக் உள்ளது. இந்த பிளாஸ்டிக்கில் ஒரு முறை உபயோகம் செய்யும் நெகிழி., பல முறை உபயோகம் செய்யும் நெகிழி என்று பல விதமான படைப்புகள் உள்ளது. அவ்வாறு இந்த நெகிழியை உபயோகம் செய்யும் நாம்., அதனை மறுசுழற்சி செய்யாமல் தீயிட்டு கொளுத்தியும்., கடல்களில் கொட்டியும் வருகிறோம். 

இதனால் பல உயிரினங்கள் பரிதாபமாக உயிரிழந்ததையும்.,  நமது உடலில் ஏற்பட்ட பிரச்சனையும் நாம் அறிவோம். இதில் இருந்து விலக்கம் அடைவதற்கு அந்தந்த நாடுகளின் அரசுகள் பல்வேறு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதனை போன்ற பெரும் பிரச்சனையாக இன்றளவில் இருப்பது மரங்களை அழித்தல் பிரச்சனையாகும். ஏனெனில் மரங்களை தொடர்ந்து அழித்து., அதிகளவு காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் வகையில் நாமே நமது பசுமையான உலகை அழித்து வருகிறோம். 


இதன் விளைவாக நமக்கு மழை பெய்யாமல் போவது அல்லது காலநிலை மாற்றம் என்று பல விதமான பிரச்சனைகள் உள்ளது. மரங்களை அழிப்பது குறித்த எத்தனை வீடியோ பதிவுகளை நாம் வெளியிட்டாலும் அது பயனில்லாமல் போகிறது. இந்த நிலையில்., தென்னை மரத்தை வெட்டிக்கொண்டு இருக்கும் சமயத்தில் இளைஞரின் மீது தென்னை மரம் விழுந்து விடுகிறது. இந்த பதிவோடு அந்த காட்சிகள் நிறைவு பெறுகிறது. இதனை கண்ட நபர் என்னய்யா வெட்டுகிறாய்... இரு உன்னை செய்கிறேன் என்ற வகையில் மரம் விழுந்ததாக சித்தரித்து பதிவிட்டுள்ளார். எது எப்படியோ மரத்தை வெட்டுபவரின் மீது மரம் விழுவதற்கு பதிலாக வெட்ட சொன்ன நபரின் மீது விழுந்தால் மன நிறைவே... இயற்கையை அழித்து யாருக்காக நாம் வாழப்போகிறோம்.  

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a tree pull down a man when man cuts tree


கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
கருத்துக் கணிப்பு

தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் யாருக்கு சாதகம்?!
Seithipunal