கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மாங்காய் லோடுடன் அடித்துச் செல்லப்பட்ட டிராக்டர்.! - Seithipunal
Seithipunal


கொட்டக்குடி ஆற்றை கடக்க முயன்ற போது வெள்ளப்பெருக்கில் மாங்காய் லோடுடன் டிராக்டர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் தேனி மாவட்டம் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேனி மாவட்டம் போடியை சேர்ந்த இளையராஜா என்பவர் தனக்கு சொந்தமான மேலப்பரவு பகுதியில் உள்ள தோட்டத்திலிருந்து டிராக்டரில் மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு கொட்டக்குடி ஆற்றை கடக்க முயன்றுள்ளார். 

அப்போது திடீரென தண்ணீரில் டிராக்டர் சிக்கி கொண்டது. இதையடுத்து ஆற்றில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் டிராக்டர் செல்ல முடியாமல் ஆற்றிலேயே அடித்து செல்லப்பட்டது. இருப்பினும் டிராக்டர் டிரைவர் சுதாரித்துக்கொண்டு குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். 

ஆனால் சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள மாங்காய் லோடு மற்றும் 2 மாதங்களுக்கு முன்பு வாங்கிய புதிய டிராக்டர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டதால் இளையராஜா மிகுந்த வேதனை அடைந்துள்ளார். மேலும் தொடர் வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றுக்கு செல்ல மற்றும் ஆற்றை கடக்க தடைவிதிக்கப்பட்டு, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கமாறு அதிகாரிகள் அறிவுறுத்திள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A tractor washed away by the flood in the Kottakudi river


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->