கடலூர் || முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் ஆறாவது தெருவை சேர்ந்தவர் இஸ்மாயில். இவருக்கு சொந்தமான ஆண்டிகுப்பம் பகுதியில் உள்ள முந்திரி எண்ணெய் தயாரிக்கும் ஆலையை விழுப்புரம் மாவட்டம் வண்டி மேடு பகுதியை சேர்ந்த கஜேந்திரன் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு ஆலையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்பொழுது நள்ளிரவு 11 மணி அளவில் திடீரென முந்திரி எண்ணெய் ஆலையில் தீப்பிடித்துள்ளது.

தீயானது கொழுந்து விட்டு எரிந்து அனைத்து இடங்களுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதில் ஆலையில் இருந்த 1200 மூட்டை முந்திரி மற்றும் 500 லிட்டர் எண்ணெய் முழுவதும் எரிந்து சேதமானது.

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர், மூத்தாண்டிகுப்பம் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தீயை அணைக்கும் பணி விடிய விடிய இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறும் நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இதையடுத்து இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible fire broke out in a cashew oil factory in Cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->