திருமணம் முடிந்த மறுநாளில் தனிமைப்படுத்தப்பட்ட புதுமண ஜோடி.. சோகத்தில் தம்பதிகள்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மணாலி பகுதியை சார்ந்த 63 வயது முதியவரின் மகன் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் பகுதியை சார்ந்த பெண்ணிற்கும் நேற்றுமுன்தினம் கூடங்குளத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இந்த திருமண நிகழ்வின் போதே மணமகன் தந்தை மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், இவரது உடல் அங்குள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த நபருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியானதை அடுத்து, 2 காவல் அதிகாரிகள், உறவினர்கள் 6 பேர் இரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

இவர்கள் 8 பேரும் அங்குள்ள ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், கூடங்குளத்தில் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட 50 பேரில் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். திருமணம் நிறைவு பெற்றதும் மணமகன் மற்றும் மணமகள் உட்பட 10 பேர் சென்னை திரும்பியதும் தெரியவந்துள்ளது. 

இதன்பின்னர் திருநெல்வேலியில் இருந்து அரசு அதிகாரிகள் மணாலி அரசு அதிகாரிளுக்கு தகவல் தெரிவித்து, அனைவரையும் தனிமைப்படுத்தினர். இவர்களுக்கும் கொரோனா தொடர்பான சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதியவரின் உடல் தகனம் செய்ய முடிவு செய்து, நாகர்கோவில் வடசேரி பகுதியில் இருக்கும் மின்மயானத்தில் தகனம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A new married couple under quarantine in Chennai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->