சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


ஈரோட்டில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் பத்ரா மாவட்டம் வருணை பகுதியை சேர்ந்தவர் அபய்குமார் பகரா(30) என்பவர், தற்பொழுது ஈரோடு மாவட்டம் மலைச்சீனாபுரம் பகுதியில் தங்கி, பீடா கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் பெருந்துறை காவல்துறையினருக்கு இவரது கடையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலையடுத்து போலீசார் அபய்குமார் பகரா கடையில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 80 கிராம் கஞ்சா மற்றும் 10 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இதையடுத்து அபய்குமார் பகராவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A man who sold ganja and tobacco products was arrested


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->