கஞ்சா வேட்டை 3.0 :: சீர்காழியில் சிக்கிய 5 கிலோ கஞ்சா..!! 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் கைது..!! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதால் தமிழக காவல்துறை சார்பில் கஞ்சா வேட்டை 3.0 திட்டத்தின் மூலம் கஞ்சா வியாபாரிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தை அடுத்த சீர்காழி சுற்று வட்டார பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா உத்தரவின் பேரில் சீர்காழி காவல் ஆய்வாளர் புயல் பாலச்சந்திரன் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சீர்காழி புறவழிச் சாலையில் சென்ற சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அந்த காரில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் காரில் இருந்தது சிதம்பரத்தை சேர்ந்த கஞ்சா மொத்த வியாபாரி மனோஜ் என்பது தெரிய வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் சீர்காழி பகுதியில் பதுங்கி இருந்த சில்லறை வியாபாரிகளான தேவேந்திரன், ராஜா, ஆதிகேசவன், அபினேஷ், வினோத் உட்பட 9 பேரை கைது செய்தனர்.

இந்த தேடுதல் வேட்டையில் கைது செய்யப்பட்ட 9 பேரில் 3 பேர் சிறுவர்கள் ஆவர். அவர்களிடமிருந்து மேலும் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய இந்த தேர்தல் வேட்டையில் 5 கிலோ கஞ்சா, சொகுசு கார் உட்பட 9 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினரை மாவட்ட கண்காணிப்பாளர் நிஷா நேரில் சென்று வாழ்த்தியதோடு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 people were arrested with 5 kg ganja in the vehicle


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->