#Breaking: ஈரோடு கிழக்கில் மல்லுக்கட்டும் 75 வேட்பாளர்கள்.. அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த் வேட்புமனு வாபஸ்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நிறைவடைந்த நிலையில் 75 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்..!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 83 பேரில் வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், நாதக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களும் ஏற்றப்பட்டது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை திரும்ப பெற இன்று மாலை 3 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்பொழுது காலக்கெடு முடிவடைந்த நிலையில் இன்று 8 வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளனர்.

அமமுக வேட்பாளர்கள் சிவபிரசாந்த் மற்றும் மாற்று வேட்பாளராக களம் இறக்கப்பட்ட விசாலாட்சி ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். 

அதேபோன்று ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி வேட்பாளர், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் வேட்பாளர், சுயேச்சைகள் 4 பேர் என மொத்தமாக 8 பேர் தங்கள் வேட்புமனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 75 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

இதனைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணியில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு மூன்று சின்னங்கள் வழங்கப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்யும்படி தேர்தல் நடத்தும் அலுவலர் சுயேச்சை வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். ஒரே சின்னத்தை இருவர் தேர்வு செய்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

75 candidates to contest in Erode East byelection


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->