வார இறுதி நாட்கள் எதிரொலி - தமிழகம் முழுவதும் 600 பேருந்துகள் இயக்க முடிவு.! - Seithipunal
Seithipunal


வார இறுதி நாட்கள் எதிரொலி - தமிழகம் முழுவதும் 600 பேருந்துகள் இயக்க முடிவு.!

தமிழகத்தில், வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளை விட கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "7-10-2023 மற்றும் 8-10-2023 உள்ளிட்ட விடுமுறை நாட்களை முன்னிட்டு இன்று சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு இன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதேபோல், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 300 சிறப்பு பேருந்துகள் என்று மொத்தம் 600 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. 

மேலும், ஞாயிற்று கிழமையன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

600 special bus run in tamilnadu for holiday


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->