தமிழகத்தில் "டெல்லி மாடலுக்கு" மாறும் 41 அரசு பள்ளிகள்..! - Seithipunal
Seithipunal


'டில்லி மாடலுக்கு'  தமிழகத்தில், 41 அரசு பள்ளிகள் மாறுகின்றன. தி.மு.க., அரசு, மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து வருகிறது. இருப்பினும், தி.மு.க அரசு அதில் உள்ள பல முக்கிய அம்சங்களை வெவ்வெறு பெயர்களில் செயலுக்கு கொண்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள, 41 அரசு பள்ளிகள் டில்லி அரசின் 'மாடல் பள்ளிகள்' போன்று மாற்றப்படுகின்றன. இதனை, இரண்டு பெயர்களில் அழைக்கப்படுகின்றன. இந்த 41 பள்ளிகளில்,  26 பள்ளிகள் 'தகைசால் பள்ளிகள்' என்றும்; 15 பள்ளிகள் 'மாதிரி பள்ளிகள்' என்றும் அழைக்கப்பட உள்ளன.

இந்த மாற்றத்திற்காக, அ.தி.மு.க., ஆட்சியின்போது  இருந்த மாதிரி பள்ளிகளும், வேறு சில புதிய பள்ளிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்கான துவக்க விழா, வரும், 5ம் தேதி சென்னை பாரதி மகளிர் கல்லுாரியில் நடக்க இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்று, தமிழக அரசின் 'டில்லி மாடல்' பள்ளி திட்டத்தை துவக்கிவைக்கிறார். மத்திய அரசு நடத்தும் 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவு தேர்வுகளுக்கு டில்லி மாடல் பள்ளிகளில், முக்கியத்துவம் அளித்து, அதற்கேற்ற பாடத்திட்டங்கள் அமைக்க  உள்ளன. இந்த பள்ளிகளில் தேசிய கல்வி கொள்கையில் அமைந்துள்ள தேச பக்தி பாடத்திட்டமும் அமல்படுத்தப்படுகிறது.

இது தவிர, ஆஸ்திரேலியா கல்வி ஆராய்ச்சி அமைப்பு, ஹார்வர்டு பல்கலைக்கழகம், மத்திய அரசின் ஐ.ஐ.டி., நிறுவனங்கள், என்.ஐ.எப்.டி. நிறுவனங்களுடன் இணைந்து, பாடத்திட்டங்கள் தயார் செய்யப்பட்டு அமலில் உள்ளன. இதில் கலை, இசை, யோகாவுக்கும் முக்கியத்துவம் தரப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம், முதல்வர் ஸ்டாலின் டில்லி சென்றபோது, அங்குள்ள பள்ளிகளை பார்வையிட்டார். அதேபோல் தமிழகத்தில் செயல்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன், இந்த மாடலை பின்பற்றி, தமிழகத்தில் செயல்பட உள்ள, 41 பள்ளிகளிலும் கூடுதல் மொழி கற்பித்தல், தேசபக்தி பாடத்திட்டம், நுழைவு தேர்வுகளுக்கான பாடத்திட்டம் போன்றவை அமல்படுத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

41 government schools change to "Delhi model" in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->