ஜமேஷா மூபின் இந்தியாவை சேர்ந்தவர் தானா? - Seithipunal
Seithipunal


மூபின் என்ற குடும்பப் பெயர் கொண்ட இந்தியர்கள் எத்தனை பேர் தெரியுமா!

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் இன்று அதிகாலை 4.15 மணி அளவில் மாருதி கார் வெடித்ததில் ஜமேஷா முபின் என்பவர் பலியானது போலீசார் விசாரணை தெரியவந்தது. ஜமேசா முபின் ஒரு பொறியியல் பட்டதாரி என தற்போது தெரியவந்துள்ளது. அவர் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரசாயன பொருள் மற்றும் பொட்டாசியம் சல்பரை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் ஜமேஷா மூபின் வீட்டு அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் சனிக்கிழமை இரவு 11:25 மணிக்கு மர்ம பொருள்களை ஜமேஷா மூபின் உட்பட ஐந்து பேர் கொண்ட கும்பல் எடுத்துச் செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.

மூபின் என்ற குடும்பப் பெயர் (Surname) கொண்ட மக்கள் தெற்காசிய நாடுகளில் மட்டுமே அதிக அளவில் வசிக்கின்றனர். குறிப்பாக பங்களாதேஷ், இந்தோனேசியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா,மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அதிக அளவில் காணப்படுகின்றனர். உலகம் முழுவதும் தோராயமாக 24,432 பேர் இந்த குடும்ப பெயருடன் வாழ்ந்து வருகின்றனர். அதிகபட்சமாக பங்களாதேஷ் நாட்டில் 6,579 பேர் இருக்கின்றனர். அடுத்தபடியாக இந்தோனேசியாவில் 6,308 பேரும், ஆப்கானிஸ்தானில் 3,422 பேரும் பாகிஸ்தானில் 3,018 பேரும் இந்தியாவில் 2,909 பேரும் மலேசியாவில் 1,289 பேரும் வசிக்கின்றனர். ரூபின் குடும்ப பெயர் கொண்ட ஒட்டு மொத்த மக்களில் 8.3% பேர் இந்தியாவில் வசிக்கின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்டங்களில் சட்டத்திற்கு புறம்பான முறையில் தங்கி இருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக கடந்த மார்ச் 15ம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 10 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதே போன்று 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 8 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற இந்தியா முழுவதும் பல்வேறு கைது நடவடிக்கைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது போன்ற நபர்கள் வங்கதேசத்தின் வழியாக ஊடுருவி இந்தியா முழுவதும் காணப்படுவதாக மத்திய அரசு தெரிவித்து இருந்தது. 

இந்த நிலையில் ஜமேஷா மூபின் இந்தியாவைச் சேர்ந்தவரா? அல்லது அண்டை நாடுகளில் இருந்து சட்டவிரோ குடியேற்றத்தின் மூலம் இந்தியாவில் தங்கி தீவிரவாத நடவடிக்கை ஈடுபட்டவரா என்பது போலீஸ் விசாரணையில் தான் தெரியவரும். தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்த ஆறு சிறப்பு தனி படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தேசிய புலனாய்வு அமைப்பினர் ஜமேஷா மூபினிடம் 2019ம் ஆண்டு விசாரணை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2909 Indian Islamist have the surname Moobin


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->