21 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை காவல்துறை.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 21 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கச்சத்தீவு அருகே 2 விசைப்படகுகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு 40க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படதையடுத்து, அப்பகுதி மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் மூலம் ஏற்கனவே வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 fisher Man arrested srilanka Coast guard


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->