11ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால் துணைத்தேர்வு கிடையாது - உயர்நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கு மேற்பட்ட படங்களில் தோல்வி அடைந்தவர்களை துணைத்தேர்வு எழுத அனுமதிப்பில்லை எனவும் கூறி மாணவர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பதினோராம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு ஒரு முறை நடவடிக்கையாக துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதி அனைத்து படங்களிலும் வெற்றி பெற்ற மாணவர்களே அடுத்த வகுப்புக்கு செல்ல முடியும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளியில் விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பதினோராம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தும் படி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

11th std supplementry exam cancel in kenthra vidhyalaya school


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->