அதிர்ச்சி - தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.! 
                                    
                                    
                                   10 tamilnadu fishermans arrested 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்யப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் இலங்கை அரசு மீனவர்களின் விசைப் படகுகளையும் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்.

இருப்பினும், மீனவர்கள் கைது செய்யப்படுவதும் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்களை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக் கூறி இலங்கை கடற்படை கைது செய்ததுடன் அவர்களுடைய 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       10 tamilnadu fishermans arrested