சாதனை செய்யவே பிறந்த நாயகன் ரச்சின்! ஜாம்பனின் ஆல்-டைம் சாதனையும் தகர்ப்பு! - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்றால், வெற்றிபெற வேண்டும் என்ற நெருக்கடியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் இன்று மோதின.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில், 6 விக்கெட் இழப்புக்கு 401 ரன்கள் எடுத்தது. 

402 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, மழை வரும் என்பதை கணித்து, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் பலனாக, டி.எல்.எஸ். விதிப்படி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதன் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. 

இந்த நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரச்சின் 108 ரன் எடுத்து அசத்தியதுடன், இந்த உலகக்கோப்பையில் மொத்தம் மூன்று சதங்களை அடித்து, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். 

25 வயதுக்குள் அதிக உலகக்கோப்பை சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை தான் தற்போது ரச்சின் தகர்த்துள்ளார்.

சச்சின் தனது 22 வயதில் 2 உலகக்கோப்பை சதங்களை அடித்திருந்த நிலையில், 23 வயதான ரச்சின் இன்று 3 வது உலகக்கோப்பை சதத்தை அடித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

World Cup Cricket Sachin Tendulkar Rachin Ravindra


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->