பெங்களூர் அணியை நிலைகுலைய செய்த அமெரிக்க வீராங்கனை தாரா நோரிஸ்! சிறப்பு விதியுடன் விளையாடும் பின்னணி!  - Seithipunal
Seithipunal


மகளிர் பிரீமியர் லீக் போட்டியின் இரண்டாவது போட்டியானது மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷபாலி வர்மா, மெக் லென்னிங் அதிரடியான ஆட்டத்தை ஆடி பெங்களூரு வீராங்கனைகளின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 15 ஓவர்களிலேயே 162 ரன்கள் எடுத்த போது தான் முதல் விக்கெட்டை பறிகொடுத்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக  ஷபாலி வர்மா 84 ரன்களும், லென்னிங் 72 ரன்களும், மேரிசன் காப் 39 ரன்களும், ரோட்ரிக்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. 

224 ரன்கள் என்ற கடின இலக்குடன் ஆடிய பெங்களூர் அணிக்கும் சுமாரான தொடக்கம் கிடைத்த நிலையில், மந்தனா, சோபியா டிவின் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, அதற்கு அடுத்து வந்த வீராங்கனைகள் அனைவரும் அமெரிக்க வீராங்கனை தாரா நொரீஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து அணியை நிலைகுலைய செய்தார்கள். குறிப்பாக ஏழு ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தனர். இதில் நான்கு விக்கெட்டுகளை தாரா நொரீஸ் கைப்பற்றினார். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் மட்டுமே பெங்களூர் அணியால் எடுக்க முடிந்தது. இதன் மூலம் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் மிகச் சிறப்பாக பந்து வீசிய அமெரிக்க வீராங்கனை தாரா நொரீஸ் நான்கு ஓவர்களை வீசி 29 ரன்களை மட்டுமே கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருக்கிறார். பெண்கள் பிரிமியர் லீக் தொடரின் ஐந்து விக்கெட்டை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையையும் அவர் பெற்றிருக்கிறார்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தாரா நோரிஸ் அணியில் இடம்பெற்றதே சுவாரசியமான விஷயமாகும். டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 வெளிநாட்டு வீரர்களை களமிறக்கியது. அந்த ஐந்தாவது வீராங்கனையாக தான் அமெரிக்காவைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான தாரா நோரிஸ் களமிறங்கினார். அவரை தவிர்த்து ஆஸ்திரேலியாவின் கேப்டன் மெக் லானிங், ஜெஸ் ஜோனாசென், தென்னாபிரிக்காவின் மரிசான் கேப், இங்கிலாந்தின் ஆலிஸ் கேப்சி ஆகிய நான்கு வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டனர். 

ஆண்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஆடும் லெவனில் அதிகபட்சம் நான்கு வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே விளையாட முடியும். ஆனால் பெண்கள் போட்டியில் புதிய விதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படியே ஒரு அணியில் அதிகபட்சமாக ஐந்து வெளிநாட்டு வீரர்கள் அனுமதிக்கப்படுவார்கள், அவர்களில் நான்கு பேர் ஐசிசியின் முழு உறுப்பு நாடுகளிலிருந்தும், ஐந்தாவது நபர் ஐசிசியின் அசோசியேட் உறுப்பினர் நாட்டிலிருந்தும் இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. 

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏலத்தின் போது வேறு எந்த அணியும் ஒரு அசோசியேட் நாடுகளிலிருந்து வீரர்களை தேர்வு செய்யவில்லை.  இதன்மூலம் WPL 2023 சீசன் முழுவதும் ஒரு போட்டியின் போது ஐந்து வெளிநாட்டினரை களமிறக்கலாம் என்ற விதியின் பயனை டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் மட்டுமே அனுபவிக்க முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Who is the tara norris whom playing WPL2023


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->