ஜடேஜா & குல்தீப் சூழலில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்.!! - Seithipunal
Seithipunal


இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என கைப்பற்றியது. இதனை எடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இன்று தொடங்கியது. கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சூழலில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  114 ரன்களுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேப்டன் சாய் ஹோப்ஸ் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். மேற்கிந்திய தீவுகள் அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்திப் யாதவ் 4  விக்கெட்டுகளும் கைப்பற்றினர். ஹர்திக் பாண்டியா, முகேஷ் குமார், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதன் மூலம் இந்திய அணிக்கு 115 ரன்கள் இலக்காக மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

West Indies all out for 114 runs against India


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->