என்னை சென்னை ரசிகர்கள் இப்படி தான் அழைப்பார்கள்!! கண்ணீர் மல்க நெகிழ்சியுடன் வாட்சன்!!  - Seithipunal
Seithipunal


மே 12 ம் தேதி நடைபெற்ற சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதி போட்டியில், காலில் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடிய ஷேன் வாட்சனுக்கு 6 தையல் போடப்பட்டு தற்பொழுது ஓய்வில் இருக்கின்றார். 

நேற்று தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது விமான நிலையத்தில் நொண்டி நொண்டி நடந்தபடியே சென்றுள்ளார். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதை கண்ட சென்னை ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த ஐபிஎல் தொடரில் ஷேன் வாட்சன் விளையாடுவாரா என்று சமூக வலைத்தளங்களில் தங்களுடைய கேள்விகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷேன் வாட்சன்., "இன்னும் 16 மாதங்களுக்கு நீங்கள் கிரிக்கட் விளையாட கூடாது என்று டாக்டர்கள் என்னிடம் அறிவுரை கூறியுள்ளனர். ஆனால் அடுத்த ஐபிஎல் தொடர் வருவதற்கு முன்பு நான் நன்றாக குணமாகி விடுவேன் என நம்புகிறேன். 

சென்னை அணிக்காக என்னால் விளையாடாமல் இருக்க முடியாது. சென்னை அணியில் நான் முக்கிய பேட்ஸ்மனாக பார்க்கப்படுகிறேன். சென்னை ரசிகர்கள் என்னை "வாட்சன் அண்ணா" என்று அழைக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் மீண்டும் வருவேன்." என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

English Summary

watson says about csk fans


கருத்துக் கணிப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்!
கருத்துக் கணிப்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எதிர்த்து திமுக பங்கேற்கும் போராட்டம்!
Seithipunal