இலங்கை தொடர், இந்திய அணி அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மற்றும் இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டிகளில் இருந்து விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒரு நாள் மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. ஒரு நாள் தொடரை 3-0 என முழுமையாக இந்திய அணி கைப்பற்றிய நிலையில், நடந்து முடிந்த இருபது ஓவர் போட்டியிலும் 2-0 என முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது இருபது ஓவர் போட்டியில் விராட் கோலி அரை சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களித்தார்.

இந்நிலையில் மூன்றாவது இருபது ஓவர் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் அந்த போட்டியில் இருந்தும், அடுத்து வரக்கூடிய இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டித்தொடரில் இருந்தும் விராட் கோலி விலகி உள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான இருபது ஓவர் போட்டி மற்றும் டெஸ்ட் ஆட்டங்களுக்கான வீரர்கள் விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இருபது ஓவர் போட்டித் தொடருக்கு, ரோகித் ஷர்மா தலைமையில் ருதுராஜ் கெய்க்வார்ட், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், பும்ரா, அவேஷ் கான் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

டெஸ்ட் ஆட்டத்திற்கு ரோகித ஷர்மா கேபடனாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரியங்க் பஞ்சால், மயங்க் அகர்வால், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ். பரத், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், சௌரப் குமார், முகமது சிராஜ், உமேஷ் யாதவ், முகமது ஷமி, பும்ரா ஆகியோர் தேர்வாகி உள்ளனர். இரு தொடருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மொஹாலியில் நடைபெறும் டெஸ்ட் போட்டி விராட் கோலிக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Virat Kohli not Participating


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->