இந்திய-ஆஸ்தி., ஆட்டத்தில் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த நம்ம விராட்.! திடிரென எடுத்த முடிவு.!  - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை தொடர் கோலாகலமாக தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது. கடந்த 17 ஆம் தேதிமுதல் தகுதி சுற்று ஆரம்பித்த நிலையில், நேற்று முன்தினம், விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும் மோதின. இதில் இந்திய அணி அபார வெற்றியை பெற்றது.

இந்நிலையில், இன்று இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் தொடங்கி நடந்து கொண்டு இருக்கிறது.

டாஸ் சுண்டப்பட்டதில், டாஸ் வென்ற டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட் செய்ய முடிவு செய்தது.

அதன்படி, ஆஸ்தி., அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் களமிறங்கினர். முதல் ஓவரில் 3 ரன்களை ஆஸ்தி., அணி எடுக்க, இரண்டாவது ஓவரில் அடுத்தது இரு விக்கெட்களை வீழ்த்தி ரவிச்சந்திரன் அஷ்வின் அசத்தினார். 

இரண்டாவது ஓவரின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்துகளில் இந்த இரு விக்கெட்களும் விழுந்ததால், ரவிச்சந்திரன் அடுத்து வீச உள்ள ஓவரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்தால் ஹார்டிக் விக்கெட் எடுக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், அவர் அந்த  வாய்ப்பில் விக்கெட் எடுக்கவில்லை.

இந்நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக விராட் கோலி ஏழாவது ஓவரை வீசி பெரும் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தார்.

அவர் வீசிய முதல் இரண்டு பந்துகளில் ரன் எதுவும் எடுக்கவில்லை. அடுத்த 4 பந்துகளில் ஸ்மித் இரண்டு ரன்களையும், மேக்ஸ்வெல் 2 எடுத்தனர். விராட் கோலி வீசிய ஓவரில் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் 4 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

மேலும், விராட் கோலி ஆட்டத்தின் 13வது ஓவரையும் வீசினார். இதில், ஒரு பவுண்டரி உட்பட 8 ரன்களை கொடுத்தார். 

திடீரென விராட் கோலி பந்து வீசியது இந்திய ரசிகர்களுக்கு பெரும் இன்ப அதிர்ச்சியாக அமைந்தது.

தற்போதுவரை ஆஸ்தி., அணி 15.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு, 100 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

virat bowling


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal