#TNPL2022 : ரசிகர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட.. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்.! - Seithipunal
Seithipunal


டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியை காண 100 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

டிஎன்பிஎல் 6-வது 20 ஓவர் கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை கோவை திண்டுக்கல் நெல்லை சேலம் ஆகிய மைதானங்களில் நடைபெறுகிறது.

இதில் நெல்லையில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்  அணியும், நெல்லை ராயல் கிங்ஸ் அணி விளையாடுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி நேற்று நெல்லையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், டிஎன்பிஎல் கிரிக்கெட் ஏற்பாடுகள் அனைத்தும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. மேலும் போட்டியை நேரில் காண ரசிகர்கள் 100 சதவீதம் முழுமையாக அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNPL 2022 100 percentage allowed to fans


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->