#IPL2023 || ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள் - ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் விற்பனை..!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16 வது சீசன் கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்பொழுது லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனி நடைபெறும் அனைத்து லீக் போட்டிகளும் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளை தவிர அனைத்து அணிகளுக்குமே அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இனி நடைபெறும் ஒரு சில போட்டிகளில் வெற்றி பெரும் அணிகள் மட்டுமே ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் 15 புள்ளிகள் உடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் பிளே ஆஃப் சுற்றுகளில் 2 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

வழக்கமாக ஆன்லைன் முறையிலும், நேரடி முறையிலும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வந்த நிலையில் பிளே ஆஃப் சுற்றுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைன் முறையில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tickets for IPL play off matches are sold online only


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->