களைகட்டும் கேலோ இந்திய போட்டி - முதலிடத்தில் எந்த மாநிலம் தெரியுமா?    - Seithipunal
Seithipunal


கடந்த 19ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி கோலாகலமாக ஆரம்பமானது. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 4 இடங்களில் வருகிற 31-ந் தேதி வரை 12 நாட்கள் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டி நடைபெறுகிறது.

இந்த விளையாட்டு, திருவிழாவில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஆக்கி, வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், டென்னிஸ், பேட்மின்டன், மல்யுத்தம், பளு தூக்குதல், டேபிள் டென்னிஸ், கூடைப் பந்து, நீச்சல், வாள்வீச்சு, குத்துச்சண்டை, ஸ்குவாஷ் உள்ளிட்ட இருபத்தாறு போட்டிகள் இடம் பெற்றுள்ளன.

பதினெட்டு வயதுக்குட்பட்டவருக்கான இந்த போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5630 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தீவிரமாக விளையாடி வருகின்றனர். இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 6 தங்கம், 2 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களுடன், பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா, அரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tamilnadu on first place in khelo india games


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->